நாகாலாந்து: ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

நாகாலாந்து: ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
நாகாலாந்து: ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

நாகாலாந்தின் 9 மாவட்டங்களில் அமலில் உள்ள ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை, மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

1958-ம் ஆண்டின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின் பிரிவு 3-ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாகாலாந்து மாநிலத்தின் 9 மாவட்டங்கள் ஆறு மாத காலத்திற்கு 'தொந்தரவுகள் நிறைந்த பகுதி' என்று மத்திய அரசு இதன்மூலம் அறிவித்து வருகிறது.

இந்தச் சட்டம் இன்று முதல் (அக்டோபர் 1-ம் தேதி) மார்ச் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். நாகாலாந்தின் திமாபூர் , நியுலாண்ட் , சுமோகெடிமா, மோன், கிஃபிர், நோக்லக், பெக், பெரன் மற்றும் ஜுன்ஹெபோடோ உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

நாகாலாந்து மாநிலம் அமைதி குலைந்த மற்றும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கருதுவதாக தெரிவித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம், “நாகாலாந்து மாநிலம் முழுவதையும் உள்ளடக்கிய பகுதி மிகவும் குழப்பமான மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது, மக்களுக்கு உதவியாக இங்கு ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவது அவசியம்” என்று கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com