\
Centre Denies Reports of All Saturdays Being Bank Holidays
கோப்புபடம்Pt web

அனைத்து சனிக்கிழமையும் வங்கி விடுமுறையா? வெளியான அறிவிப்பு!! மறுப்பு தெரிவித்த மத்திய அரசு

அனைத்து சனிக்கிழமையும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என வெளியாகியிருந்த தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
Published on: 

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு மாதத்தில் 2 மற்றும் 4 சனிக்கிழமை விடுமுறையும், 1 மற்றும் 3 வது சனிக்கிழமை வழக்கம்போல் வேலை நாளாகவும் இருந்து வருகிறது. இந்தநிலையில் தான், ஊழியர்களின் பணி-வாழ்க்கைச் சமநிலையை மேம்படுத்த வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை முறையை நடைமுறைப்படுத்தக் கோரி, இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றன. எனினும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது.

கோப்புபடம்
கோப்புபடம்AI

இந்தச்சூழலில் தான், கடந்த வாரம் செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர் வேலை நிறுத்தத்தை வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. எனினும், மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கு சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, வங்கி வேலை நிறுத்த ஒத்திவைக்கப்பட்டு 3 நாட்களும் வழக்கபோல் செயல்பட்டன. எனினும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என்ற எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்தச்சூழலில் தான், தற்போது வங்கிகள் இனி வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே வங்கிகள் செயல்படும் எனவும் அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சகம் பெயரில் அறிவிப்பு வெளியாகி வங்கி ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. எனினும், இந்த அறிக்கையை தாங்கள் வெளியிடவில்லை எனவும் இது போலியான அறிக்கை எனவும் மத்திய அரசு தற்போது தெளிவுப்படுத்தியிருக்கிறது.

Centre Denies Reports of All Saturdays Being Bank Holidays
'வெற்றிப் பயணம்’ திட்டம் நாளை தொடக்கம்.. எந்தெந்தப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com