விழாக்கால கொண்டாட்டம்: ரயில்வே ஊழியர்களுக்கு சுமார் 78 நாள் ஊதியம் போனஸ்!

விழாக்கால கொண்டாட்டம்: ரயில்வே ஊழியர்களுக்கு சுமார் 78 நாள் ஊதியம் போனஸ்!
விழாக்கால கொண்டாட்டம்: ரயில்வே ஊழியர்களுக்கு சுமார் 78 நாள் ஊதியம் போனஸ்!

ரயில்வே துறையில் ஊழியர்களுக்கு 78 நாள்களுக்கான ஊதியத்துக்கு இணையான உற்பத்தி சார்ந்த போனஸ் அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் பணிபுரியும் அரசிதழ் பதிவு பெறா நிலையிலான ஊழியா்களுக்கு வழங்கப்படும் இந்த போனஸ் தொகை மூலம் சுமார் 11 லட்சத்து 27 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விழாக்கால கொண்டாட்டத்தை முன்னிட்டு தசரா விடுமுறைகளுக்கு முன்பாக இத்தொகை வழங்கப்படும் என்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க 1,832 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ரயில்வே துறையின் ரயில்வே காவல் படை தவிா்த்து, பிற அரசிதழ் பதிவு பெறா நிலையிலான துறை ஊழியா்களுக்கு 78 நாள்களுக்கான ஊதியத்துக்கு சமமான தொகையை போனஸாக அளிக்க பிரதமா் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளாா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com