’பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் வாரிசுகளுக்கு.. 4 MBBS சீட்’ - மத்திய உள் துறை ஒதுக்கீடு
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் வாரிசுகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு ஒதுக்கீடாக 4 எம்பிபிஎஸ் சீட்களை அறிவித்துள்ளது.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கல்விக்காக, 2026-27 கல்வியாண்டில் 4 எம்பிபிஎஸ் இடங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. அதன்படி பிஹார், மஹாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற தகுதியான வாரிசுதாரர்கள் உரிய ஆவணங்களுடன் செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

