தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, அகதிகளாக இந்தியா வந்துள்ள இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை அளிக்க இந்த மசோதா வழி செய்கிறது.
மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்னும் இரு தினங்களில் அறிமுகம் செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பட்டியலினத்தவருக்கான ஒதுக்கீட்டை 10 ஆண்டுகள் நீட்டிக்க அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது. வரும் ஜனவரி மாதம் 25-ஆம் தேதியுடன் இட ஒதுக்கீடு காலாவதியாகும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என அமைச்சரவையில் முடிவாகியுள்ளது.