“மக்களை கேட்டே கல்விக்குழு அறிக்கை அமல்படுத்தப்படும்” - நிர்மலா சீதாராமன்

“மக்களை கேட்டே கல்விக்குழு அறிக்கை அமல்படுத்தப்படும்” - நிர்மலா சீதாராமன்

“மக்களை கேட்டே கல்விக்குழு அறிக்கை அமல்படுத்தப்படும்” - நிர்மலா சீதாராமன்
Published on

மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்விக்குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்‌பட்ட்டது. அதன்படி இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் #StopHindiImposition, #TNAgainstHindiImposition ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகின. ஒருபடி மேலாக சென்று #StopHindiImposition உலக அளவில் ட்ரெண்டிங்கில் மூன்றாம் இடத்தை பிடித்தது. 

இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே “ஒரே பாரதம் உன்னத பாரதம்” #EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்.” என்று பதிவிட்டுள்ளார். இதற்கிடையே எந்த ஒரு மொழியும் மக்களிடம் திணிக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com