\
உத்தவ் தாக்கரேவை அவதூறாக பேசிய புகாரில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது

உத்தவ் தாக்கரேவை அவதூறாக பேசிய புகாரில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது

உத்தவ் தாக்கரேவை அவதூறாக பேசிய புகாரில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது
Published on: 

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுதந்திர தினவிழாவில் நாடு சுந்ததிரம் பெற்ற ஆண்டை தவறாக குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே குறித்து நாராயண் ரானே அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உத்தவ் தாக்கரேவை அவமதித்ததாக சிவசேனா தொண்டர்கள் தொடர் போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். மும்பை, நாசிக் , புனே போன்ற பகுதிகளில் பாஜக அலுவலகங்கள்மீது சிவசேனா தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து நாசிக் போலீசார் வழக்குப்பதிவு செய்தநிலையில் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை ரத்னகிரி காவல்துறையினர் இன்று தடுப்புக் காவலில் கைது செய்தனர். இதன்பிறகு அவர் விசாரணை நடத்தி விடுவிக்கப்படுவாரா அல்லது கைது செய்யப்படுவாரா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com