\
“தமிழ்நாட்டு அகதிகள் இந்தியாவிற்குள் வருகை” - மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

“தமிழ்நாட்டு அகதிகள் இந்தியாவிற்குள் வருகை” - மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

“தமிழ்நாட்டு அகதிகள் இந்தியாவிற்குள் வருகை” - மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை
Published on

தமிழ்நாட்டிலிருந்து வரும் அகதிகள் என்று தவறுதலாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடாளுமன்றத்தில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தில் இன்று பேசிய கிரண் ரிஜிஜூ, இலங்கையில் இருந்து வரும் அகதிகள் என்று சொல்வதற்கு பதிலாக தமிழ்நாட்டிலிருந்து வரும் அகதிகள் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரோஹிங்கியா அகதிகள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த கிரண் ரிஜிஜூ தமிழ்நாடு, திபெத் உள்ளிட்ட இடங்களில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகின்றனர் என்று கூறினார். 

உடனடியாக பிற கட்சி எம்.பி.க்கள் கிரண் ரிஜிஜூவின் தவறை சுட்டிக்காட்டினர். அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். அவர்களை அமைதிப்படுத்தும் வகையில் தனது தவறை கிரண் ரிஜிஜூ திருத்திக்கொள்ளுமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறினார். அமைச்சர் வாய் தவறி சொல்லிவிட்டார் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com