இந்தியா
கொரோனாவில் இருந்து மீண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
கொரோனாவில் இருந்து மீண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்களப் பணியாளர்களும் கூட கொரோனா தொற்றுக்கு உள்ளாகுகின்றனர். அந்த வரிசையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த 2ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார்.
இந்நிலையில் அமித்ஷா கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். என்னையும் எனது குடும்பத்தினரையும் ஆசிர்வதித்த அனைவருக்கு நன்றி. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இன்னும் சில நாட்கள் வீட்டில் தனிமையில் இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.