"பசியால் வாடும் மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது" - ப.சிதம்பரம்

"பசியால் வாடும் மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது" - ப.சிதம்பரம்

"பசியால் வாடும் மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது" - ப.சிதம்பரம்
Published on

பசியால் வாடும் மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ப.சிதம்பரம், கையிலிருந்த பணம் செலவழிந்த நிலையில், பலர் இலவச உணவுக்காக வரிசையில் காத்திருப்பதை காண முடிவதாக தெரிவித்துள்ளார். இந்திய உணவு கழகத்தில் கையிருப்பில் உள்ள 77 மில்லியன் டன் தானியங்களை இவர்களுக்கு இலவசமாக வழங்காதது ஏன் ? என சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏழை மக்களின் மாண்பைக் காக்கும் வகையில் அவர்களின் சேமிப்பு கணக்கில் அரசு நேரடியாக பணத்தை வரவு வைக்காதது ஏன் ? எனவும் ப.சிதம்பரம் வினவியுள்ளார். இரக்கமற்ற அரசுதான், ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்க்கும் எனவும் அவர் மத்திய அரசை சாடியுள்ளார். பசியால் வாடும் மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com