தமிழகத்துக்கு வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்ட தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வறட்சி நிவாரணத் தொகையாக தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரத்து 748 கோடியே 28 லட்ச ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்தா புயல் நிவாரண நிதியாக 264 கோடியே 11 லட்ச ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் திட்டங்களுக்காக 2 கோடியே 60 லட்ச ரூபாயும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்துக்கு 2 ஆயிரத்து 14 கோடியே 45 லட்ச ரூபாயை மத்திய அரசு விடுவித்திருக்கிறது. நிவாரணத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதை மாநில அரசு உறுதிப்படுத்தவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.