central government warning of reserve bank voicemail
model imagex page

ரிசர்வ் வங்கி அனுப்பியதுபோல் வாய்ஸ் மெயிலா? மக்களே உஷார்.. மத்திய அரசு எச்சரிக்கை!

ரிசர்வ் வங்கியிடம் இருந்து குரல் செய்தி (voicemail) என வந்திருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Published on

ரிசர்வ் வங்கியிடம் இருந்து குரல் செய்தி (voicemail) என வந்திருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

“உங்கள் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 2 மணி நேரத்தில் உங்கள் வங்கிக் கணக்குகள் முடப்படும்” என ரிசர்வ் வங்கியிலிருந்து அனுப்பியது போல் குரல் செய்தி வந்தால் எச்சரிக்கையாகி விட வேண்டும்.

central government warning of reserve bank voicemail
“ஆபாசப் படம் பார்த்த பட்டியலில் உங்கள் பெயர்..! ” - இளைஞர்களை மிரட்டும் போன் கால்..!

உதாரணத்திற்கு, அவர்கள், எண் 9ஐ அழுத்தவும் எனக் கூறினால், அதை செய்தால் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் அத்தனையும் திருடப்பட்டு விடும். எனவே, அந்த எண்ணை உடனடியாக பிளாக் செய்து புகார் அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில், ரிசர்வ் வங்கி தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ, இமெயில் மூலமாகவோ பொதுமக்களை தொடர்பு கொள்ளாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com