
வரதட்சணைக் கொடுமையால் 2016ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 7,621 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த பெண்கள் குறித்த தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. இதில், 2016ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 7,621 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 58 பெண்களும், 2015ஆம் ஆண்டு 65 பெண்களும், 2014ஆம் ஆண்டு 95 பெண்களும் மரணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2,479 பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மிக அதிகபட்சமாக வரதட்சணை மரணம் நிகழும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பிஹாரில் 987 பேரும், மத்திய பிரதேசத்தில் 629 பேரும் உயிரிழந்துள்ளனர்.