ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு: மத்திய அரசு தகவல்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு: மத்திய அரசு தகவல்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு: மத்திய அரசு தகவல்
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்கும் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், “ஆன்லைன் கேமிங் என்பது உலகம் முழுவதும் வேகமாக விரிவடைந்து வரக்கூடிய சூழலில், இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த விவரங்களை மத்திய அரசும் அறிந்து வைத்திருக்கிறது.
அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவணையின் படி சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி சில மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்திருக்கிறது. மத்திய அரசும், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இதனை நெறிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது” எனக் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com