இந்தியா
மருத்துவ சேர்க்கையில் மத்திய அரசின் தலையீடு உள்நோக்கம் கொண்டது: திருமாவளவன்
மருத்துவ சேர்க்கையில் மத்திய அரசின் தலையீடு உள்நோக்கம் கொண்டது: திருமாவளவன்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மட்டுமல்ல நாடு முழுவதும் விலக்கு அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றும் மதிப்பில்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது, மருத்துவ கல்வியில் மத்திய அரசு நேரடியாக தலையிடுவது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. அனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மட்டுமல்ல நாடு முழுவதும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.