\
டிசம்பர் 1 முதல் முழு ஊரடங்கு? - மத்திய அரசு மறுப்பு

டிசம்பர் 1 முதல் முழு ஊரடங்கு? - மத்திய அரசு மறுப்பு

டிசம்பர் 1 முதல் முழு ஊரடங்கு? - மத்திய அரசு மறுப்பு
Published on

டிசம்பர் 1 முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து படிப்படியாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இதைத்தொடர்ந்து இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதாகவும் டிசம்பர் 1 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளிவந்திருக்கும் செய்தி வதந்தி எனவும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com