டெல்லியை பாதுகாக்க கட்டமைப்பு : மத்திய அரசு திட்டம்

டெல்லியை பாதுகாக்க கட்டமைப்பு : மத்திய அரசு திட்டம்

டெல்லியை பாதுகாக்க கட்டமைப்பு : மத்திய அரசு திட்டம்
Published on

தலைநகர் டெல்லியை எதிரிகளின் ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்க நவீன தொழில் நுட்ப வசதிகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. 

டெல்லியை ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்க, சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமெரிக்காவில் இருந்து ஏவுகணை அழிப்பு கட்டமைப்பை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வசதி மூலம் வானில் எதிரி ஏவுகணைகள் வரும் போதே இடைமறித்து தாக்கி அழிக்க முடியும். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ராணுவ தளவாட கொள்முதல் குழுவின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த திட்டம் நிறைவேறும் போது வாஷிங்டன், மாஸ்கோ ஆகிய நகரங்களை போல டெல்லியும் ஏவுகணை தாக்குதல் அபாயங்களில் இருந்து முழு பாதுகாப்பை பெறும். இது தவிர டெல்லியில் உள்ள மிகமிக முக்கிய கட்டடங்களான குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், சவுத் மற்றும் நார்த் பிளாக் அடங்கிய விஐபி 89 என குறிப்பிடப்படும் பகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. தாக்குதல்கள் நடக்கும் பட்சத்தில் அது தொடர்பாக அதிவிரைவாக முடிவெடுக்கும் நடைமுறையை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com