இணைய தள வழியாக விற்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அதிகபட்ச சில்லறை உள்ளிட்ட முக்கிய விதிகள் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.
இணைய தள நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் புதிய விதிகளை புத்தாண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பொருளின் எம்.ஆர்.பி எனப்படும் அதிகபட்ச விற்பனை விலை, காலாவதி நாள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விவரங்கள் ஆகியவை அச்சிடப்பட்டிருப்பது கட்டாயமாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இதற்கான உத்தரவை பிறப்பித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இணைய தள வணிக நிறுவனங்களுக்கு 6 மாதங்கள் கால அவகாசம் அளித்திருந்தது. அது நிறைவடைந்த நிலையில், புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.