\
போதைப்பொருள் வழக்கு
போதைப்பொருள் வழக்குmeta ai

போதை புழக்கத்தை ஒடுக்க மத்திய அரசு தீவிரம்.. ஓராண்டில் 24 திட்டங்கள் செயலாக்கம்!

போதை புழக்கத்தை ஒடுக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது..
Published on
Summary

நாடு முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பலதரப்பட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் முதல் ஆகஸ்ட் வரை 24 திட்டங்கள் மூலம் குற்றவாளிகளை பிடித்தல், வெளிநாட்டு கடத்தல்காரரை வெளியேற்றல், விமான நிலையம், துறைமுகங்களில் கண்காணிப்பு வலுப்படுத்தல், போதை செடிகளை அழித்தல் ஆகியவை முன்னெடுக்கப்படுகின்றன. மத்திய அமைப்புகள், மாநில அரசுகள் இணைந்து இந்த முயற்சியை செயல்படுத்த உள்ளன.

போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் வகையில் வரும் மாதம் முதல் நாடு முழுவதும் மேலும் சில திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்வது, போதை கடத்தலில் தொடர்புள்ள வெளிநாட்டினரை நாடு கடத்துவது, விமான நிலையங்கள், துறைமுகங்களில் சோதனையை முழுவீச்சில் மேற்கொள்வது, போதைப்பொருள் செடிகளை அழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

போதைப்பொருள்
போதைப்பொருள்x

செப்டம்பரில் தொடங்கி அடுத்தாண்டு ஆகஸ்ட் வரை 24 விதமான திட்டங்கள் தலா 15 நாட்கள் வீதம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு பல்வேறு மத்திய அரசு அமைப்புகள் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது

போதைப்பொருள் வழக்கு
LPG-லிருந்து PNG-க்கு மாற்ற அரசு தீவிரம்.. மாநில அரசுகளுக்கு பெட்ரோலிய அமைச்சகம் கடிதம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com