”மார்ச் 2022 வரை இலவச உணவு தானியத் திட்டம் தொடரும்” - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

”மார்ச் 2022 வரை இலவச உணவு தானியத் திட்டம் தொடரும்” - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
”மார்ச் 2022 வரை இலவச உணவு தானியத் திட்டம் தொடரும்” - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

நியாயவிலை கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்குவது தொடரும் என மத்திய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சரவை தெரிவித்திருக்கும் தகவலில், “அடுத்தாண்டு மார்ச் வரை, 80 கோடி ஏழை மக்களுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, மத்திய அரசு நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. பின்னர் இரண்டாம் அலையின்போது இந்தத்திட்டம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றினால் வேலையின்மை அதிகரித்திருப்பதால், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com