மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களைத் திறக்க உத்தரவு  

மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களைத் திறக்க உத்தரவு  
மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களைத் திறக்க உத்தரவு   

மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலம், நினைவுச்சின்னங்களை நாளை முதல் திறக்க அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. பாதிப்புக்கு ஏற்ப பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஆன்மீக தளங்களும், கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தளர்வுகளில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலம், நினைவுச்சின்னங்களை நாளை முதல் திறக்க அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்துத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல், மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலம், நினைவுச்சின்னங்களை நாளை முதல் திறக்க அனுமதி. உள்துறை அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு வழிகாட்டல் உத்தரவுகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com