ஆசிரியர்களுக்கு இனி கற்பிக்கும் பணி மட்டுமே: மத்திய அரசு முடிவு

ஆசிரியர்களுக்கு இனி கற்பிக்கும் பணி மட்டுமே: மத்திய அரசு முடிவு

ஆசிரியர்களுக்கு இனி கற்பிக்கும் பணி மட்டுமே: மத்திய அரசு முடிவு
Published on

பயிற்றுவித்தல் தொடர்பில்லா பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்துவதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மத்திய அரசின் சார்பில் தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அதில் ஆசிரியர்களை பயிற்றுவித்தல் மற்றும் கல்வி சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தாமல் இதர பணிகளுக்கு
பயன்படுத்துவதால் கல்வித் தரம் குறைகிறது என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் பணி, ஆதார் பணி போன்றவற்றில்
ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவற்றால் பயிற்றுவிக்கும் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது என ஆய்வறிக்கையில்  
கூறப்பட்டுள்ளது. 

சராசரியாக 4 ஆசிரியர்களில் 2 பேர் கல்வி சாரா, பயிற்றுவித்தல் அல்லா பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதும்
கண்டறியப்பட்டுள்ளது. 
இந்த ஆய்வறிக்கையை தொடர்ந்து, இனிமேல் ஆசிரியர்கள் கல்வி சார்ந்த பணிகளில் மட்டுமே
ஈடுபடுத்தப்படும் நிலையை உருவாக்கி, கல்வித் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com