வாட்ஸ்அப், பேஸ்புக்கிற்கு மத்திய அரசு புதிய சட்டம்?

வாட்ஸ்அப், பேஸ்புக்கிற்கு மத்திய அரசு புதிய சட்டம்?

வாட்ஸ்அப், பேஸ்புக்கிற்கு மத்திய அரசு புதிய சட்டம்?
Published on

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் வதந்திகளை கண்டறிந்து, 24 மணி நேரத்தில் நீக்க வழிவகை செய்யும் வகையிலான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ்அப்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள செயலிகள் உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாகவும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளன. இந்தச் செயலிகள் கடந்த ஆண்டு பெரும் சர்ச்சைக்குளானது. அதன்பின்னர் பல புதிய அப்டேட்கள் அதில் கொண்டுவரப்பட்டன. இதனால் பொய்யான தகவல்கள் அதிகம் பரவுவதாக சமூக வலைத்தளம்மான வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கையை பலர் முன்வைத்தனர். 

இந்நிலையில் வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன்படி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பொய்யான தகவல்களை பரப்புபவரை கண்டறிய வேண்டும், 24 மணி நேரத்தில் அந்தத் தகவல்களை நீக்க வேண்டும் என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டுள்ளது. அரசு நிறுவனங்கள் இது தொடர்பான தகவல்களை கேட்டால் 72 மணி நேரத்திற்குள் உரிய தகவல்களை அளிக்கவும் இந்தச் சட்டத்தில் திருத்தம்  செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com