“ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது என்பது கட்டாயமல்ல” - மத்திய அரசு

ஆதார் அட்டையை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது என்பது கட்டாயமல்ல என மத்திய அரசு மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர் டெரக் ஓ பிரைன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு என்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்படவில்லை எனவும், ஏற்கனவே பழைய வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் நபர் ஒருவர், புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்யும் பட்சத்தில் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் அதிகாரிகளால் எளிதில் கண்டறிய முடியும் என்ற நோக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருவதாகவும், நிதி உதவி, மானியங்கள், பலன்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com