இந்தியா
சட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி
சட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி
நாடு முழுவதும் சட்டவிரோத பண பரிவர்த்தனையை கண்காணித்து தடுப்பதற்காக உயர்நிலை குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
நிதி, வெளியுறவு, அமலாக்கம் உள்பட ஐந்து அமைச்சகங்களை சேர்ந்த 19 பேர் கொண்ட குழு இதற்காக அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ளவர்கள் பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தப்படும் நிதி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுப்பது தொடர்பான கொள்கைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், நிதி, பொருளாதார விவகாரம், கார்பரேட் விவகாரம் மற்றும் வெளியறவு துறையை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.