\
student protests
student protests web

GenZ இளைஞர்களை கவர புது ‘IDEA’.. 'ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்' திட்டத்தை கையிலெடுக்கும் மத்திய அரசு!

ஜென் ஸி இளைஞர்களை நேரடியாக அணுக மத்திய அரசு ‘ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்’ திட்டத்தை அறிவித்துள்ளது.
Published on
Summary

ஜென் ஸி இளைஞர்களை நேரடியாக அணுக மத்திய அரசு ‘ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்’ திட்டத்தை அறிவித்துள்ளது.

நாட்டின் முக்கிய விவகாரங்களில் ஜென் ஸி இளைஞர்களின் கருத்துகளைக் கேட்டறியும் விதமாக 'ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்' என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்கீழ் தினம் ஓர் பல்கலைக்கழகத்துக்கு ஒரு மத்திய அமைச்சர் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்.

students protest
students protestpti

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் மன ஓட்டத்தை தெரிந்துகொள்வதுடன், மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என பாஜக அரசு நம்புகிறது.

student protests
தென் மாநில முதல்வர்கள் மீது அதிக குற்ற வழக்குகள்.. 28 மாநிலங்களில் 14 முதல்வர்கள் மீது வழக்குகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com