வயநாடு நிலச்சரிவு’முகநூல்
இந்தியா
’வயநாடு நிலச்சரிவு’ இயற்கை பேரிடராக அறிவித்தது மத்திய அரசு!
வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த நிலச்சரிவை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த நிலச்சரிவை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கேரள அரசிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தீவிர இயற்கை பேரிடராக அறிவிக்கப்பட்டதால் அதற்கேற்ற இழப்பீடுகள் வழங்கப்படும் என்றும் மத்திய குழு அறிக்கைப்படி இந்த நிதியுதவி இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு இழப்பீடு வழங்க போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
ஜூலை 30ஆம் தேதி வயநாட்டில் 3 கிராமங்களில் நேர்ந்த நிலச்சரிவில் 200க்கு மேற்பட்டோர் இறந்தனர். பலர் காயமடைந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். கேரளா சந்தித்த மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது