குழந்தைகளை ஒழுங்கீனமாகச் சித்தரிக்கக் கூடாது - மத்திய அரசு

குழந்தைகளை ஒழுங்கீனமாகச் சித்தரிக்கக் கூடாது - மத்திய அரசு
குழந்தைகளை ஒழுங்கீனமாகச் சித்தரிக்கக் கூடாது - மத்திய அரசு

டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகளை ஒழுங்கீனமாக சித்தரிப்பதைத் தவிர்க்க வேண்டுமென, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை உணர்வுடன் ஒளிபரப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளில் சினிமா நடிகர்களைப் போன்று குழந்தைகளை நடனமாடச் செய்வது அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. 

தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், சினிமாவில் இடம்பெறும் நடனம், இசை, பாடல் மற்றும் வசனங்களில் வயதுக்கு பொருந்தாத வகையில் குழந்தைகள் இடம்பெறச் செய்யக்கூடாது என்றும் குழந்தைகளை தவறாக சித்தரித்து, எந்த நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள சேனல் ஒளிபரப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com