
கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்களை சிபில் சட்டத்தின்கீழ் இணைப்பதில் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் பெறும் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாத சூழலில், சிபில் சட்டத்தின்கீழ் அவர்களை இணைப்பதில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து மத்திய அரசுக்கு திமுக எம்பி திருச்சி சிவா கடிதம் எழுதினார். இந்நிலையில் திருச்சி சிவாவிற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், கல்விக் கடனை செலுத்த தவறுவோருக்கு சிபில் சட்டத்தில் இருந்து விலக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால், கல்விக் கடனை திருப்பிச் செலுத்த இயலாத மாணவர்கள், எந்த வங்கியிலும் கடன் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.S