விவாகரத்து..! முற்றுபெற்றது ஐஏஎஸ் தம்பதியரான டீனா தாபி - அதார் ஆமீர் கான் மண வாழ்க்கை

விவாகரத்து..! முற்றுபெற்றது ஐஏஎஸ் தம்பதியரான டீனா தாபி - அதார் ஆமீர் கான் மண வாழ்க்கை
விவாகரத்து..! முற்றுபெற்றது ஐஏஎஸ் தம்பதியரான டீனா தாபி - அதார் ஆமீர் கான் மண வாழ்க்கை

இந்தியாவில் வைரல் டாக்குக்கு ஆளானவர்கள் ஐஏஎஸ் தம்பதியரான டீனா தாபி - அதார் ஆமீர் கான். அதற்கு காரணம் அவர்களது காதலும், திருமணமும் தான். இருவரும் கடந்த 2015-இல் நடைபெற்ற இந்திய குடிமைப் பணி தேர்வில் டாப் இரண்டு இடங்களை பிடித்தவர்கள். 

அதில் போபாலை சேர்ந்த டீனா தாபி முதலிடம் பிடித்திருந்தார். மேலும் இந்திய குடிமைப் பணி தேர்வில் முதல்முறையாக பட்டியலின பெண் ஒருவராக அவர் முதலிடம் பிடித்து அசத்தினார். 

கண்டதும் காதல்!

காஷ்மீரை சேர்ந்த அதார் ஆமீர் கான் அதே தேர்வில் இரண்டாவது இடம் பிடித்தார். இருவரும் முசோரியில் பயிற்சியின் போது ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். அதில் அதார் ஆமீர் கான், டீனாவை பார்த்த நொடியிலேயே காதலில் விழுந்துள்ளார். நாளடைவில் டீனாவும் ஆமீரை காதலித்துள்ளார். இதனை டீனா பொது வெளியில் சமூக வலைத்தளம் மூலமாக 2016 வாக்கில் பகிர்ந்திருந்தார். அவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் சம்மதம் சொல்லி இருந்தனர்.

லவ் ஜிகாத்

இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். மதங்களை கடந்து அவர்களை ஒற்றைப் புள்ளியில் இணைத்தது காதல். இருந்தாலும் ‘லவ் ஜிகாத்’ என சொல்லி சில எதிர்ப்புகளும் அவர்களது காதலை எதிர்த்தது. அந்த எதிர்ப்புகளை கடந்து இருவரும் இணைந்தனர். 

2018-இல் இருவரும் மண வாழ்க்கையில் இணைந்தனர். அந்த நிகழ்வில் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு உட்பட பல பிரபலங்களும், மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். அவர்களது திருமணம் காஷ்மீரில் நடைபெற்றது. இருவரும் அவர்களது பணியை கவனித்தபடி வாழ்க்கையில் சேர்ந்து பயணத்தினர்.

சங்கடமான வாழ்க்கை!

இரண்டாண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2020-இல் பரஸ்பரமாக முன்வந்து விவாகரத்து பெறுவதாக சொல்லி ஜெய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் டீனா. அதையடுத்து அவர்களது இனிமை நிகழ்ந்த மண வாழ்க்கை கசப்பான முடிவை எட்டியது. அதற்கு முன்னதாக அவகளுக்குள் முரண் இருப்பது அவர்களது சமூக வலைத்தள பயனர் கணக்கு மூலமாக தெரிந்தது. 

இந்த விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 10 அன்று இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக தீர்ப்பில் தெரிவித்தார். அதையடுத்து அவர்களது மண வாழ்க்கை முற்று பெற்றுள்ளது. 

"உங்களுக்கு சந்தோஷம் கொடுப்பதை செய்து உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழுங்கள்" என தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார் டீனா. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com