கிறிஸ்துமஸ் கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு பகிரங்க மிரட்டல்

கிறிஸ்துமஸ் கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு பகிரங்க மிரட்டல்

கிறிஸ்துமஸ் கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு பகிரங்க மிரட்டல்
Published on

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கீழ் செயல்படும் ஹிந்து ஜக்ரான் மான்ச் அமைப்பு அலிகார் நகரில் உள்ள பள்ளிகளுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது என்றும் அப்படி கொண்டாட விரும்பினால் தங்களது சொந்த ரிஸ்க்கில் கொண்டாடிக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அலிகார் நகரில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொணியில் இந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து ஹிந்து ஜக்ரான் மான்ச் அமைப்பின் அலிகார் நகர் தலைவர் சோனு சவிதா கூறுகையில், எல்லா பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், என்ன நடக்கிறது என்பதை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த மிரட்டல் குறித்து கவலை தெரிவித்த பள்ளிக்கல்வி சமூக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் பிரவீன் அகர்வால், ஒவ்வொரு வருடமும் அனைத்து சமுதாயங்களை சேர்ந்தவர்களின் பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறோம். இந்த கொண்டாட்டங்கள் மாணவர்களை நாட்டிற்கு பொறுப்பான பணியாற்ற உதவுகிறது” என்றார். மேலும் பெற்றோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனுராக் குப்தா கூறுகையில், மாணவர்கள் பல்வேறு மதங்களை பற்றி புரிந்து கொள்ள இதுபோன்ற கொண்டாட்டங்கள் உதவுகிறது என்று தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது என்று யாரும் கட்டாயப்படுத்துவதை மாவட்ட அதிகாரிகள் அனுமதிக்கமாட்டார்கள் என்று மூத்த காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் பாண்டே கூறினார். பள்ளிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் யாரேனும் இடையூறு அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com