இந்திய போர் விமானங்கள்
இந்திய போர் விமானங்கள்முகநூல்

பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவா? வெளியான முக்கிய தகவல்

பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்தியாவின் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பான கேள்விகளுக்கு இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் பதிலளித்துள்ளார்.
Published on

பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்தியாவின் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பான கேள்விகளுக்கு இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் பதிலளித்துள்ளார்.

சிங்கப்பூரில் மே 31 சனிக்கிழமை, ப்ளூம்பெர்க் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், ” ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைவிட, அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதே கவனிக்க வேண்டியது என்று நான் நினைக்கிறேன். ஆறு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது முற்றிலும் தவறு. ஆனால் நான் முதலிலேயே சொன்னது போல், இந்த தகவல் முக்கியமில்லை. ஜெட் விமானங்கள் ஏன் விழுந்தன, அதன் பிறகு நாங்கள் என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம்.” என்று தெரிவித்தார்.

மேலும், "குறைந்தபட்சம் ஒரு ஜெட் விமானமாவது சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது சரியா?" என பத்திரிகையாளர் வினா எழுப்பினார்.

" ஆம், அது ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டது. நல்ல விஷயம் என்னவென்றால், எங்களது உத்தி சார்ந்த தவறுகளை நாங்கள் அறிந்து கொள்ள முடிந்தது, அதை நாங்கள் இரண்டு நாட்களுக்குள் சரிசெய்து, பிறகு அதை செயல்படுத்தினோம். இதற்குப் பிறகு நாங்கள் அனைத்து ஜெட் விமானங்களையும் பறக்கவிட்டு தொலைதூர இலக்குகளை குறிவைத்தோம்." என்றார்.

இந்திய போர் விமானங்கள்
’ ஒவ்வொரு துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி‘ - பிரதமர் மோடி!

முன்னதாக இதே விவகாரத்தில் கருத்து கூறியிருந்த விமானப்படை இயக்குர் ஏர் மார்ஷல் ஏகே பார்தி, போர்களில் இழப்புகள் ஏற்படுவது சகஜம்தான் என்று எனினும் விமானிகள் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டனர் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com