\
பட்டப்பகலில் நடுரோட்டில் கொலை... வீடியோ காட்சிகள் வெளியீடு

பட்டப்பகலில் நடுரோட்டில் கொலை... வீடியோ காட்சிகள் வெளியீடு

பட்டப்பகலில் நடுரோட்டில் கொலை... வீடியோ காட்சிகள் வெளியீடு
Published on

ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடப்பாவை அடுத்த பிரக்தூர் என்ற பகுதியில் இந்தக் கொலைக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாலையில் ஒருவரை கீழே தள்ளி, ஆயுதங்களைக்கொண்டு இருவர் கொலை செய்யும் காட்சிகள் செல்போனில் பதிவாகியுள்ளன. பட்டப்பகலில் நடந்த கொலை தாக்குதலை யாரும் தடுக்க முயற்சிக்கவில்லை என்பதை காட்சிகளை பார்க்கும்போது தெரிகிறது. கொலை செய்யப்பட்டவர் தேவினாஸ் என்பதும், குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகவும் அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர். செல்போன் காட்சிகளைக்கொண்டு குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com