இந்தியா
திரைப்படப் பாணியில் சிறையில் இருந்து தப்பிய கைதி.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
கர்நாடகாவில் சினிமா பாணியில் 40 அடி சுற்றுச்சுவரில் இருந்து குதித்து, கைதியொருவர் தப்பி ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம், தாவனகெரே அருகேயுள்ள கரூரைச் சேர்ந்த வசந்த் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தாவனகெரே சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் வசந்த் சிறைச்சாலை சுற்றுச்சுவர் அருகேயுள்ள தென்னை மரத்தில் ஏறி 40 அடி உயர சுவரிலிருந்து குதித்து தப்பிச் சென்றார்.

CCTV footage of Karnataka prisoner escaping
அப்போது அவரது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் ஒற்றைக்காலில் நடந்தபடி அங்கு வந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றார். தற்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர்.