இந்தியா
திருப்பதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்
திருப்பதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலை சுற்றி சுமார் 1,400 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக 4.2 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, உயர்பாதுகாப்பு இடமாக கருதப்படும் கோயில் மற்றும் நான்கு மாடவீதிகளில் 280 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அலுவலர் ரவிகிருஷ்ணா தெரிவித்தார்.
இன்னும் 6 மாதங்களில் கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக பொருத்தப்பட்டு திருமலை முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.