\
பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பஸ்களில் சிசிடிவி கேமரா

பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பஸ்களில் சிசிடிவி கேமரா

பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பஸ்களில் சிசிடிவி கேமரா
Published on

டெல்லியில், பெண்களின் பாதுகாப்பை கருதி அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

டெல்லியில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் 3,800 பேருந்துகளிலும், டெல்லி இன்டகிரேட்டட் மல்டி மாடல் சிஸ்டம் அமைப்பின்கீழ் இயக்கப்படும் 1,200 கிளாஸ்டர் பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இதனால் டெல்லியில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப் போவதாக டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.103.25 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com