விண்ணப்ப கட்டணத்தால் ரூ100 கோடி இலாபம் பார்த்த சி.பி.எஸ்.இ.

விண்ணப்ப கட்டணத்தால் ரூ100 கோடி இலாபம் பார்த்த சி.பி.எஸ்.இ.

விண்ணப்ப கட்டணத்தால் ரூ100 கோடி இலாபம் பார்த்த சி.பி.எஸ்.இ.
Published on

நீட் என்ற மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது. இதற்காக ஓ.சி மற்றும் ஓ.பி.சி பிரிவை சேர்ந்த மாணவர்களிடம் இருந்து ரூ.1400 மற்றும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடம் இருந்து ரூ.750 பெறப்படுகிறது. சமீபத்தில் நடந்த எம்.பி.பி.எஸ் நுழைத்தேர்வுக்காக மட்டும் 13 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரம். 

நீட் தேர்வுக்காக பெறப்படும் விண்ணப்ப கட்டணம் மூலம் வசூலிக்கப்படும் பணம் எவ்வளவு என்றும் , கடந்த ஆண்டு வசூலான பணம் எவ்வளவு என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில் 2017-ம் ஆண்டில் விண்ணப்பக் கட்டணம் மூலம் வசூலான தொகை ரூ.145 கோடி. அதில் செலவான தொகை சுமார் ரூ.40 கோடி மட்டுமே. ஒரே ஒரு தேர்வால் சி.பி.எஸ்.இ.க்கு இலாபம் 104 கோடி. மற்ற தேர்வுகளையும் சேர்த்தால் ? 

அதே போல் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்வுகளில் சி.பி.எஸ்.இ. வசூலித்த தொகை என்பது ரூ.168 கோடி.  இந்த வருடத்துக்கான செலவு பதிலில் சொல்லப்படவில்லை. இவ்வளவு தொகை வசூலித்து 2 மடங்குக்கு மேல் இலாபம் பார்க்கும் சி.பி.எஸ்.இ விண்ணப்ப கட்டணத்தை குறைக்குமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com