சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள்
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள்fb

வெளியானது சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள்!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
Published on

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருக்கிறது.

2024- 25ஆம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் பிப்ரவரி 15-ல் தொடங்கி, ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 19,299 பள்ளிகளில் 7330 தேர்வு மையங்களில் எழுதினர். 16,92,794 பேர் தேர்வை எழுதிய நிலையில், 14 ,96, 307 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தவகையில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.41 சதவீதம் அதிகம் ஆகும். தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை அறியலாம்.

 சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி!

முதல் இடம் யார்?

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் அதிகபட்சமாக விஜயவாடாவில் 99.60%, குறைந்தபட்சமாக பிரயாக்ராஜ் 79.53% மாணாக்கர்கள் தேர்ச்சி; சென்னை மண்டலத்தில் 97.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மேலும், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.94% கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். 91.64% மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில் 85.70% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com