பெய்ரூட் விபத்து எதிரொலி:  மத்திய சுங்க வாரியம் அதிரடி உத்தரவு

பெய்ரூட் விபத்து எதிரொலி: மத்திய சுங்க வாரியம் அதிரடி உத்தரவு

பெய்ரூட் விபத்து எதிரொலி: மத்திய சுங்க வாரியம் அதிரடி உத்தரவு
Published on

லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,000 பேர் காயப்பட்டுள்ளனர். அங்குள்ள துறைமுக கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2000 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் தான் வெடிவிபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் பெய்ரூட் விபத்தை அடுத்து கிடங்குகள் மற்றும் துறைமுகங்களில் வைக்கப்பட்டிருக்கும் அபாயகரமான மற்றும் வெடிக்கும் மாதிரியான பொருட்கள் உள்ள அனைத்து இடங்களிலும் தீ தடுப்பு மாதிரியான அவசர கால பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பூர்த்தி செய்துள்ளனவா மற்றும் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை  என்பதை அடுத்த 48 மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்த வேண்டும் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி ) தனது கள அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

லெபனான் வெடி விபத்து சம்பவத்தை கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐசி தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகில் சுமார் 1.80 கோடி ரூபாய் மதிப்புள்ள அம்மோனியம் நைட்ரேட் கெமிக்கல் 37 கன்டைனர்களில் வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com