ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா
ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜாகோப்புப்படம்

‘ஆடுதாம் ஆந்திரா’ நிதி மோசடி புகார்: ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா மீது நடவடிக்கை?

"ஆடுதாம் ஆந்திரா" நிதி மோசடி புகாரில் ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா உட்பட இருவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Published on

நடிகை ரோஜா ஆந்திராவில் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது ஆடுதாம் ஆந்திரா என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கிய 100 கோடி ரூபாய் நிதியில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, ஆத்யா-பாத்யா அமைப்பினர் விஜயவாடா சிஐடி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரத்தில் தர்மன கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட சிலருக்கும் தொடர்பு இருப்பதாக ஆத்யா-பாத்யா அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா
கொல்கத்தா மருத்துவர் கொலை: வெடித்த வன்முறை.. தடயத்தை அழித்ததா மர்ம கும்பல்? ஆலியா பட் போட்ட பதிவு!

அதன் அடிப்படையில், ரோஜா, தர்மன கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க விஜயவாடா மாநகர காவல் ஆணையருக்கு சிஐடி ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார். விரைவில் நடிகை ரோஜா உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com