தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி உட்பட 20 பேர் அதிரடி மாற்றம்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி உட்பட 20 பேரை அதிரடியாக மாற்றியுள்ளார் சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ்.
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதனால் மத்திய அரசு, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதையடுத்து அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் பதவி ஏற்றார். பின்னர் அவரை தீயணைப்பு மற்றும் ஊர்க் காவ ல் படை இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே கட்டாய விடுப்பில் அனுப்பப் பட்ட ராகேஷ் அஸ்தானாவையும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியது.
இந்நிலையில் சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ், 20 அதிகாரிகளை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதில், 2ஜி அலைகற் றை முறைகேடு வழக்கை விசாரித்து வந்த டெல்லி ஊழல் தடுப்பு பிரிவி அதிகாரி விவேக் பிரியதர்ஷினி, சண்டிகருக்கு மாற்றப் பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரித்து வரும் அதிகாரி சரவணன், வங்கி முறைகேடு விசாரணை பிரிவின் மும்பை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த பிரிவு, வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி வழக்கு பற்றி விசாரணை நடத்தி வருகிறது. இங்கு மாற்றப்பட்டாலும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும் அவர் விசாரிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
(நாகேஸ்வர ராவ்)
சிபிஐ அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு பிரிவு அதிகாரி பிரேம் கவுதம் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப் பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சத்தீஷ்கரில் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த ராம கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட 20 அதிகாரிகளை அதிரடியாக மாற்றி சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் உத்தரவிட்டுள்ளார்.