''கூட்டுப்பாலியல் வன்கொடுமை'' - ஹத்ராஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ

''கூட்டுப்பாலியல் வன்கொடுமை'' - ஹத்ராஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ
''கூட்டுப்பாலியல் வன்கொடுமை'' - ஹத்ராஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ

ஹத்ராஸ் வழக்கில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டே இறந்துள்ளார் என கைதாகியவர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது 

கடந்த செப்டம்பர் மாதம் உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில்  பட்டியலினத்தைச்  சேர்ந்த 19 வயது பெண்ணை, உயர் வகுப்பை சேர்ந்த நான்கு பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். அதில் இளம்பெண் இறந்துபோன நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நீண்ட இழுபறிகளுக்கு பிறகு உத்தர பிரதேச அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் இளம்பெண் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக நேற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது சிபிஐ. 

இது உத்தர பிரதேச மாநில போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரைக்கு நேர் மாறாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்திய தண்டனை சட்டம் 376 (வன்கொடுமை), 376 D (கூட்டு பாலியல் வன்கொடுமை), 302 (கொலை) மற்றும் பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தீப், ரவி, ராமு மற்றும் லவ குஷா என நான்கு பேர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கான ஆதாரங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவாக இருப்பதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி  4 ஆம் தேதி அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com