ப.சிதம்பரம் இல்லத்துக்கு தொடர்ந்து படையெடுக்கும் சிபிஐ
மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் இல்லத்துக்கு தொடர்ந்து 4 வது முறையாக சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்கப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் குழு டெல்லியில் உள்ள கபில் சிபல் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது. உச்சநீதிமன்றத்தில் சிதம்பரத்தின் முன் ஜாமின் தொடர்பான வழக்கு விசாரணையை எடுத்துக்கூற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனிடையே மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித்திடம் சிதம்பரம் விவகாரத்தில் சி.பி.ஐ. நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நியாயமற்றது என பதிலளித்தார்.
இந்நிலையில், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் இல்லத்துக்கு தொடர்ந்து 4 வது முறையாக சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். ஏற்கனவே இன்று காலை 8.10 மணி அளவில் 3 வது முறையாக சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை என்றதும் 8.45 மணிக்கு திரும்பி சென்றனர். இதையடுத்து தற்போது சென்றுள்ளனர்.