இந்தியா
அமலாக்கத்துறையில் சரணடைவாரா ப.சிதம்பரம் ? - சிபிஐ நீதிமன்றம் நாளை உத்தரவு
அமலாக்கத்துறையில் சரணடைவாரா ப.சிதம்பரம் ? - சிபிஐ நீதிமன்றம் நாளை உத்தரவு
அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரம் திகார் சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்தது. இதனால் தான் அமலாக்கத்துறையிடம் சரணடைய விரும்புவதாக ப.சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பாக நாளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.