டெல்லி துணை முதல்வர் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை -அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

டெல்லி துணை முதல்வர் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை -அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
டெல்லி துணை முதல்வர் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை -அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் அண்மையில் மது பானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு என குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி அரசுக்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டது என புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா இல்லம் மற்றும் என்.சி.ஆர்.பகுதி உள்ளிட்ட 21 இடங்களில் இன்று காலை முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுக்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சி.பி.ஐ. எங்கள் இல்லம் வந்துவிட்டது. நாங்கள் நேர்மையானவர்கள். லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குகிறோம். இது மிகவும் துரதிஷ்டவசமானது. இந்த நாட்டில் யார் நல்ல வேலையை செய்தாலும் இப்படிதான் தொந்தரவு செய்கிறார்கள். அதனால் தான் நம் நாடு இன்னும் நம்பர் ஒன் ஆகவில்லை. கல்வி மற்றும் சுகாதாரத்தில் டெல்லி சிறப்பாக செயல்படுகிறது. அதை தடுத்து நிறுத்த வழி செய்கிறார்கள். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்யேந்திர ஜெயின் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். எங்கள் இருவர் மீதும் பொய் வழக்குகள் உள்ளன நீதிமன்றத்தில் உண்மை வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

இந்த சோதனைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்ட மதுபான கொள்கையில் முறையீடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பின்னர் அந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: POSOCO-விடம் மின்சாரம் வாங்கவும் விற்கவும் தமிழகத்துக்கு தடை! ஏன் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com