பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ரோடு கிளை மூலம் நடந்த ரூ.11,700 கோடி மோசடி நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி இந்த மோசடியில் ஈடுபட்டார். நிரவ் மோடி தனது குடும்பத்துடன் வெளிநாடு தப்பி விட்டனர். இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையிலும் சிபிஐ சோதனை நடத்தியது. நிரவ் மோடி நிறுவன அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல அமலாக்கத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் உள்ள நிரவ் மோடி நிறுவனங்களிலும் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மறைந்த தொழிலபதிர் திருபாய் அம்பானியின் மருமகன் விபுல் அம்பானி உள்ளிட்ட 5 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். நிரவ் மோடிக்கு சொந்தமான நிதி நிறுவனத்தை விபுல் அம்பானி கடந்த 3 வருடங்களாக நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.