ஒரு பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை - கேரள அதிரடிப்படை 

ஒரு பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை - கேரள அதிரடிப்படை 
ஒரு பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை - கேரள அதிரடிப்படை 

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த மஞ்சகண்டி வனப்பகுதியில் அதிரடிப்படையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உட்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

கடந்த வியாழக்கிழமை இந்தியாவிலுள்ள 30 மாவட்டங்களுக்கு மாவோயிஸ்ட்டுகளால் ஆபத்து ஏற்பட உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதில் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு மாவோயிஸ்ட்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை கேரள அரசுக்கு தகவல் அனுப்பியது. 

இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மஞ்சகண்டி மலைப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக கேரள அதிரடிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 50 கேரள தண்டர்போல்டு எனப்படும் அதிரடிப்படை காவல்துறையினர் துப்பாக்கியுடன் சென்றனர். மலைப்பகுதிக்கு காவல் துறையினர் வந்ததையறிந்த மாவோயிஸ்ட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பதிலுக்கு போலீசாரும் சுட்டனர். 

சுமார் ஒரு மணி நேரம் சண்டை நீடித்தது. மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் எதிராக தண்டர்போல்டு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் பாலக்காடு எஸ்.பி விக்ரம் சிவா, மாவட்ட சப் கலெக்டர் பாண்டியன் மற்றும் கூடுதல் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.  

மாவோயிஸ்ட் எதிராக தண்டர்போல்டு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை அசிடெண்ட் கமாண்டர் சாலமன் வழிநடத்தினார். துப்பாக்கிச்சூட்டில் ஒருசில போலீசாருக்கு காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. துப்பாக்கிச்சூட்டில், ஸ்ரீமதி, கார்த்தி, சுரேஷ் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மேலும், தப்பியோடிய  4 மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் தாண்டர்போல்ட் போலீசாரும், கேரள போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு மாலை வரை நீடித்ததாலும், சம்பவம் நடந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com