கன்னட அமைப்பினர் நூதன போராட்டம்: டி.கே.சிவகுமார் சொன்ன அந்த வார்த்தை!

”காவிர் நீர் விவகாரத்தில் கர்நாடகா பாதுகாப்பாக இருக்கிறது” என அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

”காவிர் நீர் விவகாரத்தில் கர்நாடகா பாதுகாப்பாக இருக்கிறது” என அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரை நிறுத்த வலியுறுத்தி, கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு 1,900க்கும் மேற்பட்ட சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பெங்களூரு, மைசூரு, மங்களூர் உள்பட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கன்னட அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவகாரம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ’கர்நாடகா பாதுகாப்பாக இருக்கிறது. அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். விவகாரம் குறித்து இன்று ஆலோசிக்க இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com