காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் பொதுப்பணித்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் பங்கேற்கிறார். இதேபோல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத் துறை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதுக் குறித்து இந்த கூட்டத்தில் தமிழகம் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் எனத் தெரிகிறது. அதேநேரத்தில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி, அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசால் அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாதம் தோறும் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்று வருகிறது.