\
காவிரி விவகாரம்: அவகாசம் கேட்கும் மத்திய அரசு

காவிரி விவகாரம்: அவகாசம் கேட்கும் மத்திய அரசு

காவிரி விவகாரம்: அவகாசம் கேட்கும் மத்திய அரசு
Published on

காவிரி விவகாரத்தில் மேலும் 3மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்எசி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம், 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதனை குறைத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டு இருந்தாலும், உரிய காலத்தில் தண்ணீரை முறையாக திறந்துவிடுவது, அதனை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களில் அமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கூறப்பட்டது.காவிரி மேலாண்மை வாரி‌யம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் இல்லை.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் மேலும் 3மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. அம்மனுவில் மத்திய அரசால் உருவாக்கப்படும் வாரியத்திற்கு தீர்ப்பாயம் அளித்ததை தவிர கூடுதல் கடமைகள் இருக்கலாமா.தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமல்லாமல், நிர்வாக அதிகாரிகளையும் உள்ளடக்க முடியுமா என கேட்கப்பட்டுள்ளது.மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான 16.2.2018இல் இருந்து 3 மாதம் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரியுள்ள மத்திய அரசு ஸ்கீம் என்றால் என்ன எனவும் அதில் கேட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com